உய்யும் தொழிலில் உன்னதம்

பெரிய ஆளுமை பேர் ஆளுமை ஆகவும், அதன்பின் 'ளு' ஆனது 'ண்' ஆக திரிந்து ஆனது பேராண்மை என
- இது இலக்கணம் விதி

பேராண்மை யெனப்படுவது பெரிய நிலபரப்பில் ஆட்சிகொள்வதும், உச்ச பதவியில் உயர்அதி காரம் கொளலும் அல்ல...அல்ல...மாறாக

செய்யும் செயலில் செயல்சிறப்பும்
உய்யும் தொழிலில் உன்னதம் எய்தலே எழில் எனும் சிறப்பு ஆண்மைக்கு ...

பேராண்மை என்பது கடும்சொல் கொண்டு கடிந்தலும் மாறா பிடிப்பு பற்றி... மாற்றம் கொளாலும் அல்ல..அல்ல...மாறாக

இன்சொல் காட்டி வண்(ன்)செயல் வாங்கல் தகும் வரம்பு கொளா அதிகாரம் எனும் ஆண்மைக்கு ...

பண்செயல் பணியில் பிணியாய் பிணைந்து அன்செயல் செய்வோர் ஆக அகம்பாவம் பீடித்து நன்செயல் நந்தனரை நசுக்கல் ஆண்மை அல்ல..அல்ல...மாறாக

அகழ்ந்து ஆராயந்து அறிதலும் புரிதலில் சரியான தி(நி)றம் மாறா சாலியாக திளைத்தலே திண்ணம் ஆண்மை எனும் மாட்சிக்கு ...

எழுதியவர் : பாளை பாண்டி (24-Nov-21, 6:17 am)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 73

மேலே