நிம்மதியாக வாழ முடியாது
நம்மை ஏமாற்ற நினைப்பவன்
நம்மை குறி வைத்து
ஏமாற்ற அலைகிறான்,
ஏமாறும் நமக்கோ
ஏமாற்றுபவன் யாரென்று
தெரியாமல் திரிகின்றோம்
ஏமாற்றுபவன் ஏய்ப்பதை
ஏவிவிட்டு சாதித்துக் கொள்வான்
ஏமாறுபவனோ, தான்
ஏமாறாமலிருக்க
எதனையும் முன் கூட்டியே
செய்யாமல் இருந்திடுவான்
ஏமாற்றுபவர்கள் தோற்றத்தாலும்
பேச்சாலும் பிறரை கவர்ந்திடுவார்கள்,
சந்தேகப்படாமலிருக்க
சாகசங்கள் பல புரிந்து
சாமர்த்தியமாக அடுத்தவரை
சஞ்சலப்படுத்தி சாதித்துக்கொள்வார்கள்
மோசடிக்காரர்கள் இப்படித்தான்
மக்களை எளிதாக ஏமாற்றி
மக்களின் வாழ்வை கெடுத்து
நாசம் செய்கிறார்கள்
நாட்டில் ஏமாளியாக வாழ்ந்தால்
நிம்மதியாக வாழ முடியாது