😇உன் நினைவலையில்😇

வந்தது போனது என்றவென்றே
தெரியாமல் இரசிக்கிறேனடி
உன் நினைவலையில்........!!

காயங்களும் மோகங்களும் ஒன்று
சேர்ந்து தாக்குதடி
உன் நினைவலையில்.........!!

காதல் என்னும் போதையில்
காயம் கண்ணைகட்டுதடி
உன் நினைவலையில்.........!!

முகங்களோ காட்டிக் கொள்ள
மறுக்கையில் வீழ்கிறேனடி
உன் நினைவலையில்..........!!

மறைத்து மறைத்து காதல்
கொண்டும் மயங்கினேனடி
உன் நினைவலையில்..........!!

வருத்தங்கள் என்னை தாக்கினாலும்
வாழ்ந்துகொண்டே இருக்கிறேனடி
உன் நினைவலையில்.........!!


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (24-Nov-21, 6:32 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 377

மேலே