கடந்து விடவே நினைக்கிறேன் 4

நான் எப்போதுமே பார்த்திருக்க
வேண்டாமே அவற்றை ...

படங்களை உருவாக்கும் கலையில்
பதிவாகி இருந்த அந்த புகைப்படங்களில்
எத்தனை எளிதாய் இணைந்திருக்கிறாய் யாரோ ஒருத்தியோடு
எவ்வித முரணுமின்றி..

காணும் போதெல்லாம் என்னுள்ளே அரிக்கும் பூச்சிகளை எப்படி அடையாளம் கண்டு கொள்வேன்

உண்மையில் இத்தனை ஆண்டுகளில் முன்பிருந்ததற்கு நல்ல முன்னேற்றம்
ஒற்றை பூச்சி இன்று பரிணாமம் பெற்றிருந்தது...

இதை எல்லாம் உன்னிடம் பகிர்ந்து கொள்ள
அவசரமாய் உனது அலைபேசி எண்களை அழுத்த உந்தும் விரல்களை மடக்கி பிடிக்கிறேன்...

காதலை ஹார்மோன் கோளாறு என்றவனாயிற்றே...
இதை என்ன சொல்வாய்...
அதீத டொபமைன் சுரப்பு என்றா?!!

இதை எழுதும் நொடியில் கூட தொடர்பு எல்லைக்கு வெளியே ஒரு பூச்சி ஊர்ந்து கொண்டிருக்கிறது
அதை நீ உணரவே வேண்டாம்!!
- மதிஒளி சரவணன்

எழுதியவர் : மதிஒளி சரவணன் (24-Nov-21, 11:26 am)
சேர்த்தது : மதிஒளி சரவணன்
பார்வை : 144

மேலே