வாழ்க்கையை அனுபவி

கவலைகளை கண்டு கலங்காதே !
துன்பங்கள் துரத்தினால் துவளாதே !
சந்தோசத்தை சந்திக்கும்போது சாயாதே !
வெற்றி வரும்போது வீராப்பு ஆகாதே !
மலர்களை பார் .....
கடவுளின் கருவறை என்பதாலோ
மனிதனின் கல்லறை என்பதாலோ
தன் தன்மையிலிருந்து மாறுவதில்லை
மலர்களை போல் மலருங்கள்
கிடைத்த பொழுதை அனுபவியுங்கள் !!