நெடிய கழியும் இரா

கன்னங்கள் சூடிடும்
உவப்பு வதனமதில்
பட்டு தெறிப்பதெல்லாம்
பரத்தையவனின்
பாசாங்கு தெளிப்புகள்

விடைக்கும் காதுமடல்களில்
கதைத்து கிடப்பதெல்லாம்
கள்வன் அவனின்
கழுத்தறுப்பு கதைகள்

காயும் நிலவில் முட்டி
முரண்டு பிடித்த மூளியிவளுள்
மோகத்தின் மொக்குகள்
மொனக்கையாக்கி போயின
விலகிச் செல்லும் வழியில் அவள்
விலா எலும்புகளில் தேய்மானம்!!
- மதிஒளி சரவணன்

எழுதியவர் : மதிஒளி சரவணன் (27-Nov-21, 11:25 pm)
சேர்த்தது : மதிஒளி சரவணன்
பார்வை : 78

மேலே