மழையே
மழையே
🌧️🌧️🌧️🌧️🌧️
வள்ளுவன் சொன்ன நல்லவன் இன்னும்
வாழ்வதாய் நினைத்து பெய்வதே நரிப்பு(வியப்பு)...
ஏரியை மனையென பீதம்(அரிதாரம்) பூசி
ஏமாற்றி வித்திட்ட மனிதனை கேட்கவா ?...
முகாமை அமைத்து முரல்(சோறு)தனை கொடுத்து
புகைப்படம் எடுக்கும் புண்ணியனை பார்க்கவா?...
மங்குல்(ஆகாயம்) இருண்டு மாதங்கள் கழிந்தும்
எங்கும் நீர்நிலை எப்போது விடுதலை...
ஏடகம்(துகில்) நனைந்து ஈரங்கள் காயல
ஊடகப்பேட்டியில் ஒன்றும் குறைவில்லை...
கச்சுரு(நெருப்பு) அணைக்கும் நெஞ்சுரம் தாண்டி
கடவுளின் சன்னதியில் புகுந்ததும் வலிமை...
சாலையோர கேதறம்(வீடு) புகுதலில் மழையே
சாமர்த்தியம் காட்டிடல் ஏழைஎன்றறிந்தா ?
உழவன் கைப்பட்ட சேற்றில்
உழத்தி கைநட்ட நாற்றில்
தெறுதல்(அழித்தல்)செய்திட திறந்திட்டாயா
இடுப்பளவு நீரே இன்றளவும் கூட...
வரப்பில் நின்றும் வயல்தனை மறந்து
புகைப்படம் பார்த்தே சேதத்தை மதிக்கும்...
தீரம்(அறிவு) நிறைந்த அதிகாரக் குழுக்கள்
தேசிகம்(அழகு)தானே நவீன நாட்டில்...
ஊறுபாடென்று(இடையூறு) நீரினைக் கண்டு
ஒருபோதும் நாங்கள் நினையாதிருக்க
இருவாழ்வியான தவளையைப் போலே
மனிதரை மண்ணில் படைத்திருக்கலாமே...
இல்லை...
செப்பம்(வீதி)தோறும் மதகுகள் அமைத்து
சென்றுவர இருக்கனும் படகுகள் படைத்து...
🌫️🌫️🌫️⛱️🌫️🌫️⛱️🌫️🌫️⛱️🌫️🌫️⛱️