காட்டுமல்லிகை வேர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சுரங்களொடு நாவறட்சி தொந்திமந்தம் பேதி
யுரங்கதித்த தாகமிவை யோட்டும் - வருஞ்சோரர்
தாமல்லி லோடுந் தகைமைபோல் ஓடிவிடுங்
காமல் லிகைவேராற் காண்

- பதார்த்த குண சிந்தாமணி

இவ்வேர்சுரங்கள், நாவறட்சி, அக்கினி மந்தம், கழிச்சல், அதிதாகம் ஆகியவற்றைப் போக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Dec-21, 10:26 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

மேலே