இனியவை நாற்பது - கடவுள் வாழ்த்து

இன்னிசை வெண்பா

கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் ...தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.

பொருளுரை:

மூன்று கண்களையுடைய சிவபெருமானின் திருவடிகளை இடைவிடாது நினைத்து அதனை அடைவது மிக இனிது.

தொன்மையான மாட்சிமை பெற்ற திருத்துழாய் மாலையை யணிந்த திருமாலை கையால் தொழுவது இனிது.

நான்கு முகங்களையுடைய பிரமதேவன் திருமுன் அடைந்து அமர்ந்து விரும்பி அவனை வாழ்த்துவது அனைத்தினும் இனிது.

முக்கண் – பகலவன், திங்கள், எரி என்னும் முச்சுடராகிய மூன்று நாட்டங்கள்.

சேர்தல் - இடைவிடாது நினைத்தல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Dec-21, 9:22 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 48

மேலே