பொய்யின் நிலை

"பொய்"
வேஷம் போட்டு
பல நேரங்களில்
உண்மையை ஊமையாக்கி
கைகொட்டி சிரித்து மகிழும் ...!!

ஆனால்...பாவம்
"பொய்க்கு" தெரியாது
உண்மையை
எல்லா நேரங்களிலும்
மறைத்து கொண்டே
இருக்க முடியாதென்று ...!!

உண்மையை
உலகம் அறியும்போது
இதுநாள் வரை
தனக்கு கிடைத்த
மதிப்பும் மரியாதையும்
வெறும் பகட்டுத்தான்
என்று புரியும் போது....!!

"ஈயத்தை பார்த்து
இளித்ததாம் பித்தளை"
என்ற கதையை போல்
இருக்கும் இடம் தெரியாமல்
"பொய்"
காணாமல் போய்விடும் ...!!
---கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (4-Dec-21, 1:52 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : poyyin nilai
பார்வை : 866

மேலே