சென்னையின் தென்னை குடிபெயர்ந்த விந்தை
சென்னையில் பிறந்த தென்னை ஹைதராபாதில் விழுந்து விளைந்தது
இதனால்தானோ சென்னைக்கும் பல நன்மைகள் தவழ்ந்து விளைந்தது
ஒரு வருடம் இரு வருடங்கள் அல்ல முப்பது வருடங்கள் உருண்டு ஓடியது
தென்னை,தேங்காய்கள் பல குவித்து ஓலைகள் பல தழைத்து வாழ்ந்தது
மீண்டும் தமிழ் மண்ணின் வாசம் காண அதில் வாசம் செய்ய விழைந்தது
பாலக்காட்டில் பெரிய தென்னையின், பிள்ளையின் திருமணம் கண்டது
கோவையில் காலடி வைத்து அம்மண்ணில் உறைய உவகை கொண்டது
சில வீடுகள் கண்டு முகம் மலர்ந்தது ஒரு வீடு கொண்டு அகம் மகிழ்ந்தது
கோவையின் பருத்தி இதென்னையின் வாழ்வினை இனிதே திருத்தியது
சென்னை பிறந்து ஹைதெராபாத் வளர்ந்து கோவையில் குடி கொண்டது
இன்னும் இருக்கும் சில வருடங்கள் இனிய யுகமாய் அமைய விரும்பியது
ஹிந்தி அறிந்து தெலுங்கு புரிந்து தாய்மொழி தமிழை மீண்டும் தழுவியது
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து, தமிழ் தாய் மடிகண்டு குதூகலித்தது
என்ன சொன்னாலும் செய்தாலும் தமிழ் மண்ணின் வாசம் மிக அலாதியே
இனி இருக்கு சொற்ப வாழ்வில் என் நாவில் தமிழ்தேன் தினம் வடியட்டும்
உங்களை போன்ற அன்பர்கள் வாழ்த்துக்களால் என் நாளை விடியட்டும்
ஆனந்த ராம்