நதிக்கே இந்த கதி

அன்னை, தந்தை அருளால்
அவதரித்த பிள்ளைகளுக்கு
உள்ளத்தைக் கவரும் வண்ணம்
ஒவ்வொரு விடியலும் இனிய
நந்நாளாய் அமையும்
கிடைக்கும் இந்த வாழ்வைக்
கவணமுடன் கையாண்டால்
காலமெல்லாம் நிம்மதி தரும்

தீய பழக்கங்களை எப்போதும்
தீண்டக் கூடாது
முதியோரை என்றும்
மதித்து நடக்கவேண்டும்
வயதானதால் அல்ல,
நல்லது, கெட்டது அறிந்தவர்கள்
நிதானம் தவறாதவர்கள்
அனுபவம் நிறைந்தவர்கள்

உறவோடும், நட்போடும்
ஒன்றினைந்து வாழுங்கள்
இருப்பவன், இல்லாதவனென்று
ஏற்றத் தாழ்வு பார்க்காதீர்கள்
அடுத்தவர் பொருளுக்கு
ஆசை படாமலும்,
இல்லாத ஏழை களுக்கு
இயன்றதை தந்து காக்க வேண்டும்

நீர் தந்து உயிர் காக்கும்
நதி கூட நல்லதை நினைக்காம
நோக்குமிடமெங்கும் புகுந்து
பொருட்களையும், வீட்டையும்
பறித்து போனதால்
பரிதவிக்கும் ஏழைகள்
பூஜிப்பார்களா இந்த நதியை?
நதிக்கே இந்த கதி.

எழுதியவர் : கோ. கணபதி. (5-Dec-21, 1:17 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 31

மேலே