உயிர்
யாரையும் கேட்பதில்லை
எவரையும்தான்;
வாள்முனை வளைவுதான்
கள்வனின் அரிவாள்!
தெளிந்த வானத்தைக்
கிழித்தெறியும்;
திறந்த வெளியில்
யாருக்கும் பாதுகாப்பில்லை!
தூரம் நெடுந்தூரம்
தொலை தூரம்;
இடைவெளிகளை நிரப்புகிறது
மூச்சுக் காற்று!
இறக்கைகள் இருந்தென்ன
பாள்வேலி;
மூச்சுக் கொல்லி
மூலை முடுக்கெங்கும்
தாள்ப்பாளிட்டு தடுக்கிறது!
ஒருமுறை ஒருமுறையேனும்
பார்த்துவிட வேண்டும்;
உயிர் கொடுத்தவரின்
உயிர் பிரியுமுன்!