அருமையான கவிதைகள்
பேனாக்கள் எல்லாம்
பணத்திற்காகவே
"குனிவதால்..."
இன்னும்
"நிமிரவே" இல்லை
பாரதம்.....
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
கல்யாணத்திற்கு முன்பு
"சகியே" என்று
அழைத்த காதலன்...
கல்யாணத்திற்குப் பிறகும்
அழைக்கிறான்
"சனியனே! "என்று...
🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️
புகைப்பிடிப்பவர்கள்
வட்டவட்டமாக வெளியிடும்
" புகை வட்டம் "
அவர்களுக்கு
விரைவில் வைக்கப்படும்
"மலர்வளையம்" என்பதை
அவர்கள் அறிவதேயில்லை....!
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
நடிகைக்கும்
"ஆடையை குறைப்பதில்"
கொஞ்சம்கூட
விருப்பம் இல்லைதான் .....
ஆனால்
என்ன செய்வது
"சம்பளத்தை
குறைத்து " விடுவார்களே...!
👗👗👗👗👗👗👗👗👗👗👗
ஏழை சிறுவர்கள்
பட்டன் இல்லாத சட்டையை
கையினால்
இறுக்கிப் பிடித்து இருக்கிறார்களே ..!
"நம் தேசத்தின்
மானம் "போய் விடக் கூடாது
என்பதற்காகவோ....?
*கவிதை ரசிகன்*
💢🛑💢🛑💢🛑💢👅💢🛑💢