காதல் தொற்று
தனித்து தான் இருந்தோம்
என் வீட்டில் நானும்
அவள் வீட்டில் அவளும்
முகக் கவசம் அணிந்து
மனக் கவசம் அணியாமல்
விலகித் தான் இருந்தோம்
அரசாங்கம் சொன்னதை விட
அதிகமாகவே முப்பது கிலோ மீட்டர் இடைவெளியில்
புளியம்பட்டியில் அவளும்
புதுப்பட்டியில் நானும்
விரக்தியில் இருந்தாலும்
வீட்டில் தான் இருந்தோம்
விழிப்புடன் தான் இருந்தோம்
ஆனாலும் நாங்கள்
இந்த தீராத காதல் தொற்றினால் பாதிக்கப்பட்டோம்