வருகைப் பதிவு
வசந்தகால வருகை
🕗🕣🕘🕤🕙🕥🕚🕦🕛🕧
வருகைப் பதிவுதான் என்று என்னை
குறைவாய் தரத்தில் மதியவும் வேண்டாம்...
கட்டத்திற்குள்ளே கையொப்ப மிட்டு
சட்டென்று மூடிச் சாய்த்தது அன்று...
ஏட்டில் இன்று பதிந்தும் பிறக்கும்
எமிஸின் கதவுகள் எனக்காய்த் திறக்கும்...
புழுவாய் நெளிந்து உள்ளே நுழைந்தும்
பழிவாங்கத் தோன்றும் பலபேர்க்கு என்னை...
மணிநேரம் கழிந்து வகுப்புகள் திறந்து
மஞ்சளும் மறைந்து பச்சையாய் தெரிய...
அலைபேசி உடம்பில் அனல்காற்று வீசும்
பதிந்தவர் நெஞ்சு பெருமூச்சு வாங்கும்...
படமாய் உடனே எடுத்துச் சுழன்று
வாட்ஸ்அப்பில் நிற்பேன் வரிசையில் சென்று...
கூகுளும் தானே எனக்காய் இன்று
கொடுத்தது கௌரவ சீட்டொன்று அமர...
இருக்கும் எந்தன் திறமையைப் பார்த்து
இன்ஸ்டகிராமும் இடம்கொடுக்க நினைத்தும்...
டுவிட்டர்காரனும் வலைகட்டிப் பிடித்து
மடக்கப் பார்க்கிறான் தினந்தோறும் தடுத்து...
ம்.........
ஒருமணி வரைக்கும் வலம் வந்தால் போதும்
மறுநேரம் மற்றதற்கும் வழிவிடத்தான் வேணும்.
🕗🕣🕘🕤🕙🕥🕚🕦🕛🕧🕐