காதல் மனசு
என் இனியவளே
உந்தன் நெருக்கத்தால்
மனதிலே காதல் வளர்ந்தது
உந்தன் பிரிவால்
மனதிலே கவலை வளர்ந்தது ...!!
ஆனால்...
உந்தன் நினைவுகள் மட்டும்
நிழல் போல்
என்னை தொடர்ந்து வந்தது ...!!
காதல் கொள்வதும்
இந்த மனசு தான்
கவலை கொள்வதும்
இந்த மனசு தான் ....!!
மனிதர்களின் எண்ணத்தின்
ஓட்டத்திற்கு ஏற்ப
இந்த மனசு படுகின்ற பாடு
இருக்கே ...!!!
பாவம் ......!!
காலில் உதைப்படும்
பந்துபோல் அங்குமிங்கும்
ஓடிக்கொண்டே இருக்கு ...!!
--கோவை சுபா