Bharathi

பாரதி

பார் போற்றும் பாரதி
பண்பு மிகும் பாரதி
பெரிய மீசை பாரதி
பெருமை மிகும் பாரதி

நல்ல நல்ல சொற்களால்
நாளும் நாட்டை உயர்த்தியே
நானிலத்தோர் உள்ளத்தில்
நீங்கா இடம் கொண்டனன்


பல்பொருள்கள் தேர்வுசெய்து
பாங்காய் அதனைப் பற்றியே
பைந்த்தமிழில் பாட்டிசைத்து
பல்லோர் பாடச் செய்தனன்

விண்ணைத் தீண்டும் வரிகளோடு
வியக்கும் அவன் பாடலில்
விட்ட செய்தி எதுவுமில்லை
வீறுகொண்டு எழச்செய்யும்

கைதொழுது வணங்கியே
களிகொண்டு போற்றுவோம்
கவிமேதையை நல்கிய
கருணை இறையைப் போற்றுவோம்.

அன்புடன்,
ஸ்ரீ.விஜயலஷ்மி
தமிழாசிரிய
கோவை-22
(11.12.2021) “ இன்று பிறந்தாள் காணும் மாகா கவிக்கு என் இதயக் குரலின் ஓசை”
குறிப்பு: இது குழந்தைக்ளுக்காக இயற்றப்பட்டது.

எழுதியவர் : ஸ்ரீ.விஜயலஷ்மி (11-Dec-21, 11:38 am)
பார்வை : 63

மேலே