தேன்மழை

கண்களினால் ஏற்றுகின்ற காதலின் தீபம்
கைப்பிடிக்க நீக்கிவிடும் காரிருள் யாவும்
பெண்ணெனுமோர் தேவதையின் பேரெழில் ரூபம்
பீடனைத்தும் ஒட்டிவிடும் பீதியும் மாற்றும்
பண்புடைய மன்னவனாய் பாவையை ஆளும்
பாங்குடைய ஆண்மகனாய் பார்புகழ் வாழத்
தண்டிகையில் ஏற்றுமிளந் தாமரை யாளைத்
தாங்குகின்றத் தண்டுனக்குத் தேன்மழை தானே

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (13-Dec-21, 1:26 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 155

மேலே