உதித்தாள்
"மண்ணில் வந்து உதித்தாளே
அன்னை!
தன் கண்ணில் வைத்து காத்திடவே பிள்ளை போல உன்னை,
"மண்ணில் வந்து உதித்தாளே
அன்னை!
1. கையிரண்டில் மலரெடுத்து,
அன்னை தன்னை துதித்தால்,
உந்தனது வாழ்வினிலே
இன்பம் அதை விதைப்பாள்.
உந்தனது வாழ்வினிலே
இன்பம் அதை விதைப்பாள்.....
"மண்ணில் வந்து உதித்தாளே
அன்னை!
2. மலரில் மணம் போல உந்தன்
நெஞ்சில் மணக்க,
இன்பத்திலும் துன்பத்திலும்
உன்னுடனே நடக்க ,
இன்பத்திலும் துன்பத்திலும்
உன்னுடனே நடக்க.....
"மண்ணில் வந்து உதித்தாளே
அன்னை!
3. சுற்றி சுழலும் பூமியிலே
வற்றிடாமல் இருக்க,
பற்றி கொள் அவள்
கரங்களையே வெற்றிகளை
குவிக்க."
பற்றி கொள் அவள்
கரங்களையே வெற்றிகளை
குவிக்க.....
"மண்ணில் வந்து உதித்தாளே
அன்னை!