விஞ்சானம்
நேரிசை வெண்பா
புவியதிர பூமியில் குண்டை வெடித்தார்
தவிக்க வெடித்ததி்ன்று வானில் -- கவினுலகு
சூழல் கெடுத்தாரே சோதனை யென்றபேரால்
பாழது பாழா னது
பாழ்.=. காற்று மண்டலம்
அன்று விஞ்சானிகள் அணுகுண்டை பாலைவனத்தில் வெடித்து பூமியை
அதிர வைத்து சோதனை செய்தார். உலகம் அதை எதிர்த்தது. இன்றோ
காற்று வளி மண்டலமாம் ஆகாயத்தில் அணுகுண்டை வெடித்து ஓசோன்
மண்டலம் கெடுத்தது அமெரிக்கா ரஷ்யா சீனா போன்ற நாடுகள்.
விஞ்சானம் வளர வளர மக்களின் சுகாதாரம் கலாச்சாரங்கள்
வாழ்வாதாரங்கள் எல்லாமும் மாறிப் போயின