அந்த மூன்று நாள்
உதிரம் படிந்த
சேலையை
வைக்கோல் போர்
மறப்பில் ஒழித்துவைத்த
அம்மா ..
மார்கழிப் பனியிலும்
ஒட்டுத் திண்ணை யோரம்
ஒதுங்கியே உறக்கத்தை
கழித்தவள்
அம்மா ..
அதங்கிய
எவர் சில்வர்
ஏனத்தில்
அந்த மூன்றுநாளும்
உணவருந்திய
அம்மா ..
விஞ்ஞான யுகத்திலும்
மெஞ்ஞான வாழ்க்கையிலும்
முட்டு சேலையை
வெள்ளாவியில் வேகவைக்க
அம்மாவை தேடிவந்த
வண்ணாந்துறை மனிதன் ..
பழமை மாறி
புதுமைவந்தாலும்
மூடப்பழக்கம்
முளையிட்டுக்
கொண்டுதான் இருக்கிறது
எங்கோ ஒரு மூலையில்