உளியின் யுத்தங்கள்

உளியின் யுத்தங்கள்
உயிர் பெறத் தவிக்கும் சப்தங்கள்
உதிக்கும் சிந்தனைகள்
உயிர் ஓட்டம் கொண்ட சிற்பியின் கற்பனைகள்
உருவாகும் வண்ண வண்ண உயிர்ச் சிலைகள்

சிலையாய் மாறிய கற்கள்
சிந்தனையில் பூத்த பூக்கள்
சிலைக்குள் புகுந்த தெய்வீகங்கள்
சிற்பியின் கனவுகள்
சிந்திக்க வைக்கும் அற்புதங்கள்

சுதந்திர காற்றை சுவாசியுங்கள்
சிறகடித்து பறந்திடப் பாருங்கள்
மனச் சிறையில் குன்றிக்கிடப்பதை விடுங்கள்
கதறி கதறி அழுவதால்
கண்ணீர் வற்றப் போவதில்லை கேளுங்கள்
கவனமாய் செயல்படுங்கள்

உளியின் யுத்தங்கள்
உருவாகும் சிற்பங்கள்
விழியின் யுத்தங்கள்
விருந்தாகும் கன்னங்கள்
வழியும் இரக்கங்கள்
வாழ்ந்திடும் மனித நேயங்கள்

உளியின் யுத்தங்கள்
உனக்குள் என்ன சப்தங்கள்
உதடுகள் மீட்கும் ராகங்கள்
உரசிடத்துடிக்கும் இதயங்கள்
எரிகிறது உதட்டின் முத்தங்கள்
ஏந்தத் தவிக்கிறது கன்னங்கள்

மொழியின் சப்தங்கள்
மொழிந்திடும் மழலைகள்
பொழிந்திடும் மழைத்துழிகள்
பொய்ப்பதில்லை இந்த அன்பு முத்தங்கள்

வானத்தில் யுத்தங்கள்
மின்னியே முழங்கும் அற்புதங்கள்
மண்டிய இருட்டுக்கள்
மனதைக் கவரும்
வானத்து நட்சந்திரங்கள்
வண்ண ஜாலத்தைக் காட்டும் அதிசயங்கள்
வனத்தில் அடர்ந்து கிடக்கும் சோலைகள்
வண்ண வண்ண பூஞ்சாலைகள்
வந்தே கிடக்கும் கானகத்து பறவைகள்
கானகத்து யுத்தங்கள்
கண்கொள்ளா காட்சிகள்
வதனத்தின் தவிப்புக்கள்
வாய்விட்டு சிரிக்கத்துடிக்கும்
முத்துப்பற்கள்

புவனத்தின் தவிப்புக்கள்
புத்திகெட்ட மனிதனின் தண்டனைகள்
கவனமாய் கேளுங்கள்
கண்ணிருந்தும் குருடனாய் மாறாதீர்கள்
கணத்தை இதயத்தில் இருந்து இறக்க
தனிமை என்ற நோயை தள்ளி விடுங்கள்


வாழ்வை இருட்டறை ஆக்காதீர்கள்
இனிமையாய் பேசுங்கள்
இருக்கும்வரை இன்பமாய் வாழுங்கள்

அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (17-Dec-21, 3:03 pm)
பார்வை : 108

மேலே