பெண்களால் நிகழுது
பொட்டு வைப்பதும் பூவைப்பதும் இன்று
கெட்டப் பழக்கம் என்றே பெண்களின் நினைப்பு
கட்டுப் படுவதும் சொல்லியே செல்வதும்
கட்டுப்பாடு என்றும் இழிவென்றும் வழக்கு
ஆபாசம் என்பது கண்ணில் உள்ளதாய்
பெண்களும் கூறியே பொத்தல் ஆடையுடுத்தி
பொதுவெளித் தன்னிலே புலனைக் தூண்டிடும்
வகையில் நடந்து நாகரீகம் என்பரே
பெண்கள் என்றவொரு பேருக்கு மரியாதை
பெண்மைத் தன்மைக்கு உள்ள உயிரோட்டம்
உண்மை நிலையை உணரா இக்காலப்
பெண்களால் நிகழுது பெண்மையில் வன்மை
அழகினை கவர்ந்திட வலிமைகள் முயலும்
பழிக்கு அஞ்சாது பாவத்தினைப் பார்க்காது
அழிவுக்கு பின்னே ஆராய்ச்சி செய்யும்
விழிப்பாய் இருந்தால் வேதனை இல்லை
கொடுத்தவன் யாரெனினும் கொள்பவள் சூலடைவாள்
அடுத்தவர் பார்த்திட அடிவயிறு வளரும்
பிடித்து இழுத்து அழிக்க நினைத்தால்
குடத்து நீரென குருதியும் உதிருமே
---- நன்னாடன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
