தனித் துணிவு

தனித் துணிவு.

என் மனதில்
என் அன்னை,
எனக்களிப்பாள்
தனித் துணிவு.

காடு மலை
ஏறிடுவேன்,
கஷ்டங்கள்
களைந்திடுவேன்.

என் மனதில்
என் அன்னை....

நோய்கள் பல
வந்தபோதும்,
உறவுகள் என்னை
மறந்தபோதும்,

என் அன்னை
எனக்களித்தாள்
தனித் துணிவு

தனிமை என்று
எனக்கில்லை,
யார் தயவும்
தேவையில்லை,

என் அன்னை
என்மனதில்....
இருக்கையிலே

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (17-Dec-21, 9:12 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : thanith thunivu
பார்வை : 221

மேலே