வேஷம்
நாடக மேடையில்
ஆயிரம் பரிவாரங்களுடன்
அதிகாரம் நிறைந்த
"ராஜா வேஷத்தில்" நான் ....!!
நாடகம் முடிந்தவுடன்
"வேஷம்" கலைத்தேன்
இப்போ...
ஆயிரம் கவலைகளுடன்
அதிகாரம் இல்லாத
சாதாரண மனிதன் நான் ...!!
மனிதனின் வாழ்க்கையே
ஒரு நாடக மேடை தான்
சிலர் "வேஷம்" இல்லாமல்
வாழ்கிறார்கள்
சிலர் "வேஷம்" போட்டு
நடிக்கிறார்கள் ...!!
ஆட்டத்தின் முடிவில்தான்
நல்லவன் யார் ...
கெட்டவன் யார் ...என்று
உலகத்திற்கு புரிகின்றது ...!!
--கோவை சுபா