காதல் பலமானது

நேரிசை வெண்பா
நாணத்தா ழும்பொருத்த காக்கும் நிறைக்கதவைக்
காண அணங்குடை நற்காவல் --- வீணாம்பின்
காதலெனும் கோடரியும் தாழ்க்கதவை வெட்டிவீழ்த்தும்
சாதனை யாமிதைக் காண்
பெண்ணிற்கு நாணம் என்பதே தாழ்ப்பாளுடன் கூடிய கனமானப் பாதுகாப்புக் கதவாக
அமையும்... ஆனால் காதலெனும் கோடரி சூழ்ந்திட அனைத்தையும் வெட்டி சாய்க்கும்.

திருக்குறள் ௧/18

எழுதியவர் : பழனி ராஜன் (22-Dec-21, 8:24 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 46

மேலே