🌄விடியல் ஒன்றை தேடினேன்🙃

இருள் இல்லாத உலகையும்
தீமையே இல்லாத நன்மையும்
தவறே இல்லாத சரியையும்
உடல் இல்லாத உயிரையும்
காதல் இல்லாத மனமும்
முத்தம் இல்லாத இதழையும்
மோகம் இல்லாத உடலையும்
பூ இல்லாத மணமும்
அவமானம் இல்லாத மங்கையும்
இதில் ஒன்றை மட்டும்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
விடியாத விடியலுக்காக................
விடை தெரியாத விடியலுக்காக..............


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (23-Dec-21, 8:19 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 211

மேலே