உத்தமர் கக்கன்ஜீ
நேரிசை ஆசிரியப்பா
இன்றைத் தினமும் கக்கன் என்னும்
மாணிக் கமுத்துப் பிறந்த நாளாம்
இத்தமிழ் நாட்டின் பலமுறை மந்திரி
குந்தவோர் சொந்த வீடில்லை சவாரி
சைக்கிள் கூட இல்லை மதுரை
மாநக ரில்கடை வீதியில் கால்நடை
யாக அங்கும் இங்கும் செல்லும்
உத்தமர் நானே கண்டேன்
தமிழகத் திலிவர் போலினி பிறப்பரோ