பங்கமில் செய்கையராகிப் பரிந்து அன்புடைய ராதல் - இனியவை நாற்பது 9

நேரிசை வெண்பா
(’ங்’ ’ண்’ ’ன்’ மெல்லின எதுகை)

தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே
அங்கண் விசும்பின் அகல்நிலாக் - காண்பினிதே
பங்கமில் செய்கையராகிப் பரிந்துயார்க்கும்
அன்புடைய ராதல் இனிது. 9

பொருளுரை:

தங்குமிடத்தில் மற்றவர்களுடன் நட்புடையரா கவும், செல்வமுடையராகவும் வாழ்வது மிக இனியதாகும்.

அழகிய இடமகன்ற வானத்தில் விரிந்த ஒளி தரும் நிலாவைக் காண்பதும் இனியதாகும்.

குற்றமில்லாத செய்கைகளுள்ள நற்குணங்களுடன் யாவரிடமும் பரிவுடன் அன்புடையவராக இருப்பது இனியதாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Dec-21, 7:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே