நீ வருவாயென
நீ வருவாயென
நேரிசை வெண்பா
துணையும் வெறுத்து நுகரா விடுத்து
அணையாத் துறந்தத் தலைவன் --- அணையை
இகழ்ந்து திரும்புமென யென்னுயிர் நிற்கும்
புகழ்வா ரெனையினியென் றும்
என்னுடன் இன்பம் நுகர்வதை விரும்பாமல், நான் துணையாவதையும் வெறுத்துத்
தன் ஊக்கத்தையே துணையாக எண்ணி, வெற்றி பெறுவதையே விரும்பி என்னைப்
பிரிந்தவர், அவற்றை இகழ்ந்து என்னிடம் திரும்ப வருவதை நான் விரும்புவதால்
எனதுயிர் இவ்வளவு காலமும் இருக்கிறது
3/19 காமத்துப் பால்
1263