எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன விச்சை மற்றல்ல பிற – நாலடியார் 134

இன்னிசை வெண்பா

வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்;
எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற. 134

- கல்வி, நாலடியார்

பொருளுரை:

வைத்த இடத்திலிருந்து பிறரால் களவு செய்யப்படாதது;

நன்மாணாக்கர் வாய்த்து அவர்க்குக் கற்பிக்க நேர்ந்து கொடுக்கப்படுமானால் அதனால் தீமை இல்லை;

தம்மினும் மிக்க செல்வாக்கினால் அரசர் கோபப்பட்டாலும் அவரால் எடுத்துக் கொள்ள மாட்டார்;

ஆதலால்; வைப்பு என ஒருவன் தன் மக்கட்குத் தேடி வைக்கத்தக்க செல்வம் கல்வியே, பிற அல்ல.

கருத்து:

கல்வியே மக்கட்குத் தேடி வைக்கத் தக்க அழியாத செல்வம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jan-22, 11:29 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 922

மேலே