அமைதியான நகரம்

அமைதி நகரம்

மாடயவியல் அமைதி பூங்கா நகரம்
ஓய்வில் இறுதி சங்கமம் கல்லரைத்
தங்கும் விடுதி ஏற்றும் தாழ்வு இல்லை  கiண்ணில் காண்பதில்லை கடைசி வரை
அனைவருக்கும் கூட்டுறவு இலக்கம்
வரலாற்றைப் பதிவிட்டு உலகில்
மண்ணின் மனதில் உறங்குகின்றார்
இனிமையான அமைதி பூங்கா நகரத்தில்!

மேதைகள் அறிஞர்கள், கலைஞர்கள்
மகான்கள் இளைய சமுதாயங்கள்  உயர்ந்தோர் தவழ்ந்தோர் காணுமிடம்
வந்தவருக்கு இடமளிக்கும் பூங்கா.
ஆடம்பரமான மாளிகை இல்லை
கல்லால் கட்டப்பட்ட அரையில்
அசையில்லா தூங்கும் மானிடன்!
அமைதியான பூங்கா நகரம் இது

அமைதிக்காக அருமையான மண்க்கூடம்
அனைவருக்கும் தொல்லைகளில்லை
நடமாட்டுமில்லா அமைதி பூங்கா நகரம்.
இங்கே அனைவரின் இதிகாசம் பேசும்
அமைதி பூங்கா இறைவனால் நியமித்தது
பூமியின் உலாவிய மானிடன் பூமிக்குள் புதைத்தான் ஆழ்ந்து நித்திரையில்
நம்பிக்கையுடன் உறங்குகிறான் -இங்கே நிஜமான திருப்பங்கள் இங்கே மலரும் !

வரலாற்று மிக்க இருதியாத்திரை
வந்தவர்கள் சிலர் மறந்தவர் பலர்!
மனமில்லாமல் மலர்ந்து உறங்குகிறோம்!
 எங்களை தொலைத்தவர்கள் பலர்!
மதமில்லை மறுமலர்ச்சியுடன்  தன்னை
மறந்து நிம்மதியுடன் உறங்குகிறோம்!
வாருங்கள் இங்கு அடிமையில்லை!
நீண்டு முடிவு இல்லாமல் உறங்கலாம்!

நிலையான இருப்பிடம் அனைவருக்கும்!
நிச்சியம் அமைதி உண்டு  ஆற்றல் உண்டு ஆண்டவனும் ஆண்டியும்  சேர்ந்து பாகுபாடு இல்லாமல் உறங்கிடுவோம்
கற்றோரும் கல்லாதவர் மகான்ங்கள்  பிறந்தோர் பிரிந்தோர் சமுகம் உறவுகள்
மேதைகள் வருகின்ற மாந்தர்க்கு
இங்கே நினைவு சின்னமாக திகழ்வீர்

பிறந்தவன் பிழைப்புக்காக வாழ்கிறான்
பெண்மையுடன் நீந்தி வாழ்கிறான். உறவுகளை எடுத்து எரித்து விழுகிறார்
அன்பென்றாலே கல்லறையில் நிரந்தர
உறக்கம் கொள்ள ஆசைப்படுகாகிறான்
கனவுகள் கண்டு நீண்ட பயணிக்கிறான்
வாழ்வின் அலைகளில் நீந்துவர் சிலர்  தத்தளிக்கும் வாழ்வில் உடந்தை போய்
மலராத எண்ணங்கள் இங்கே! மலர்ந்து
நீண்ட பயணம் மேற்கொள்ளுகிறான்
அமைதி உறக்கத்தை!

நண்பரே!தோழரே! மேதைகளே!
வாருங்கள் நீங்கள் படைத்த இதிகாசம்
காலம் கடந்து வாழும்! பூமிதனில்!
அடிமை பட்ட நாளில் அடிப்பட்நாளும்
இருளை கண்டு துக்கமடைந்தோர் பலர்.
பகுற்ந்து கொள்ள வாருங்கள்! நிம்மதி
தேடி அலைந்தார் பலர்
இங்கே இரைச்சல் கூச்சல் இல்லாத
இனிய பூங்கா நகரம் அமைதி நகரம்
இருப்பினும்----
நாம் இறக்கும் போது, ​​தயவு செய்து என்னைச் சவப்பெட்டியில் கிடத்தாதே என் கையில் ஒரு விதையுடன் என்னைப் புதைக்கவும் ஒரு ஆழமான முழு தோண்டி உடலை உள்ளே வைப்பதை விட, என்னை மண்ணால் போர்த்தி விடு மழை என்னை வளர்க்கட்டும் என் உடல் சிதையத் தொடங்கியதும், என் வேர் பூமியின் மையப்பகுதி வரை நீண்டிருக்கும் மேலும்  வானத்தை அடையும் என் இலைகளும் கிளைகளும் பூமியின் எல்லைகளை நோக்கிச் செல்லும் வையகத்தில் என்னை மீண்டும் வரவேற்கட்டும் சூரியனின் கதிர்கள் என் மீது பொழிகின்ற மீண்டும் ஒருமுறை நான் வாழ்க்கையை அனுபவிப்பேன், நாம் மீண்டும் வருவோம்

எழுதியவர் : இராகு.அரங்க.இரவிசந்திரன் (5-Jan-22, 8:38 pm)
பார்வை : 79

மேலே