என் மனையாள்
அவள் வேண்டுவதெல்லாம் என் உள்ளன்பு ஒன்றே
அதனால் அவள் உயர்ந்த காதலி
என் அன்பில் என்னைக் காண்பவள்
நான் தரும் பகட்டு பரிசுகளில் அல்ல
இவளல்லவோ என் வதுவை நாளை
என்னை ஆளப்போகும் என்மனையாள்