வேட்டையின் நாட்டம்

இருட்டு பூமியை
உருட்டிப் போட்டு
விளக்கையேற்றி

தேங்கும் இருளை
தீர்த்து கட்ட
தொழிலை ஏற்று

அலைகள் ஆழ்ந்த
கடலை தாண்ட
மலையின் முதுகில்
ஏறி அமர்ந்து...

வேட்டையாட தொடங்கும் முன்னே
ஒளியும், இருளுங்கலந்த நேரம்
வியர்வை வாசம் தொலைவில் உருவம்
மெல்ல இருளை ஓங்கி தாக்க

உழவன் ஒருவன், எருதுமிரண்டு
வறண்ட நிலத்தை வேட்டையாடி
தூக்கிப்போகாமல் போகின்றனர்
யாருக்காகவோ..

எல்லாம் நாள் போகதான் தெரியும் "என
முனகுது சூரியன்
தன் மைதான மேகத்திடம்

எழுதியவர் : ஆ. ஸ்டாலின் சகாயராஜ் (5-Jan-22, 8:55 pm)
சேர்த்தது : Stalin Saga
பார்வை : 79

மேலே