காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 6

காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 6

பாகம் ஆறு
============

(ஒரு புது புரஜக்ட்.. அதில் கலக்க மூவர் கிளம்பி செல்கின்றனர்.. வழியில் ஒரு புதுப்பிரச்சனை. அப்பிரச்சனையிலிருந்து வெளியேறி மிக மகிழ்ச்சியான நினைவுகளோடு தொடர்கிறது அவர்களது பயணம். அவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவார கிராமம் 'வனமேடு' அடைந்தனர். அங்கு தங்க ஏற்பாடு செய்துவிட்டு காடு நோக்கிய தங்கள் பயணத்தைத் தொடங்கினர். வழியிலேயே கண்ணில் பட்டது தீக்காயங்களுடன் ஒரு நரி.. அடுத்து என்ன? வாருங்கள் பார்க்கலாம்)

இவர்களைக் கண்டதும் அரண்ட நரி.. காட்டுக்குள் ஓடி மறைந்தது. அதனை சிறிதளவாவது வீடியோ எடுத்துக்கொண்டோமே என்ற திருப்தி தர்ஷினிக்கு ஏற்பட்டது. அங்கிருந்து மீண்டும் ஆரம்பமானது பயணம்.

"நம்ம மேம் அவங்களோட ஒரு ப்ரண்டப் பத்தி சொன்னாங்களே, அவங்க நம்பர் இருந்தா ஒரு ரிங் பண்ணே", என்றாள் மேகலா.

"ஓ.. அவங்களா..! எனக்கும் இப்பத்தான் அவங்க கிட்ட பேசனும்னு தோணுச்சு.. இதோ பண்றேன்"

ரிங் அடித்த அடுத்த நொடியே எடுக்கப்பட்டது.

"யாரு தர்ஷினியா?"

"எஸ் மேம்.. எங்க மேம் உங்க நம்பர் கொடுத்து ஒரு டைம் கான்டக்ட் பண்ணச் சொன்னாங்க"

"ஓகே.. ஓகே.. நானும் உங்க கால் வரும்னு எதிர்பார்த்திட்டே இருந்தேன்.. இப்ப எக்சாக்டா எங்க இருக்கீங்க?"

'வனமேடு'ங்கற கிராமத்துல வந்து தங்கிட்டு அங்க இருந்து காட்ட நோக்கி போய்க்கிட்டு இருக்கறோம்"

"கிரேட்.. உங்க புரஜக்ட் சரியான இடத்துல இருந்து தான் தொடங்கி இருக்கு... இதுவரைக்கும் எதாவது அறிகுறி தெரிஞ்சுதா!"

"ம்கூம்.. இந்த ஊர் மக்களுக்கு இதப்பத்தி அவ்வளவா தெரில.. ஆனா உங்களுக்கு ரிங் பண்றதுக்கு முன்னாடி தான் நெருப்பால காயப்பட்ட ஒரு நரிய நாங்க பார்த்தோம்.."

"ஓ... அப்ப சரியான திசைல தான் உங்க பயணம் போகுது... சரி.. கலக்குங்க.. கவனமா இருங்க"

"ஓகே மேம்.. தேங்க்ஸ்.."

தர்ஷினி போனை வைக்க, ஷாலினி ஆரம்பித்தாள்.

"என்னடி சொல்றாங்க அவங்க?"

"சரியான திசையில் தான் நம்ம பயணம் இருக்குதாம்.. பத்தியா இப்பத்தான் ஞாபகம் வருது.. வீடு பார்த்து தங்கிட்டு சாரு மேம்க்கு போன் பண்றோம்னு சொன்னோம்.. மறந்துட்டோம்.. உடனே போன் பண்ணு ஷாலினி"

"அட ஆமால்ல.. இதோ இப்ப பண்றேன்.."

"ஹாய் மேம்.. காட்டுக்குள்ள போக ஆரம்பிச்சுட்டோம்..."

"ம்.. ஒரு வீடு கெடச்சுச்சு.. எஸ் மேம்.. ஒரு சின்ன க்ளிப் எடுத்தோம்.. அனுப்பிச்சிருப்பா பாருங்க"

"ஓகே மேம்.. தேங்க்ஸ்..", என போனை வைத்தவள்..

"ம்... சொல்லியாச்சு.. இப்ப தான் திருப்தியா இருக்கு..", என்றபடியே வருணிடம் பேச்சுக் கொடுத்தாள்..

"என்ன வருண், நீங்க எதுவும் பேசாம அமைதியா வர்றீங்க...! ஒரே பொண்ணுங்களா இருக்கவும் பயந்துட்டீங்களா?"

"ச்ச.. ச்ச.. அப்படியெல்லாம் இல்லங்க.. எல்லாரும் ஒரு பிரபல டிவில வேலை பார்க்கற பிரபலங்கள். டக்குனு எனக்கு என்ன பேசறதுனே தெரில.. என்னை ஹெல்ப்புக்குனு வேற கூப்பிட்டிருக்கீங்க.. அந்த ஹெல்ப்ப நல்லா பண்ணி எப்படி நல்லப் பேர வாங்கறதுனு நான் யோசிச்சிட்டே வரேன்.. அதான் எனக்கு எதுவும் பேசத் தோணல.. சரி விடுங்க.. இப்பவாச்சும் நீங்க வந்த கரெக்டான ரீசனச் சொன்னீங்கனா.. நான் என்ன உதவி பண்ண முடியும்னு யோசிக்க முடியும்.."

"சரி.. மொதல்ல ஒரு சின்னக் கேள்வி.. அதுக்கு பதில் சொல்லுங்க"

"இல்ல... 'ங்க'வ விட்டுடலாம்.. ப்ரண்ட்ஸாவே பழகலாம்.. நீங்க எல்லாம் என்னைவிட பெரியவங்க தான்.. என்னை பேரச் சொல்லியே கூப்பிடுங்களேன்.."

"நைஸ் வருண்.. தெளிவான ஆள் தான் நீ.. சொல்லு.. இந்தப்பக்கமெல்லாம் 'காட்டுத்தீ'... இதப்பத்தி மக்கள் என்ன நினைக்கறாங்க..?"

"காட்டுத்தீயா!? ... எஸ் முன்னாடியே இதப்பத்தி கேட்டீங்க.. பிருந்தாகிட்டேயும் இதையே கேட்டதா அவ சொன்னா.. அப்பப்ப எங்கேயாவது காட்டுத்தீ பிடிச்சிருக்குனு யாராவது சொல்லுவாங்க.. பாரஸ்ட் டிபார்ட்மென்டுக்கு உடனே தகவல் போயிடும்.. அவங்க தேவையான நடவடிக்கைல உடனே இறங்கி அத கட்டுப்படுத்திடுவாங்க.."

"அப்பறம் நாம என்ன விஷயமா காட்டுக்குள்ள போறோம்? எதாவது வனவிலங்குகளோட வீடியோ எடுக்கப் போறீங்களா? நானே சிங்கம், புலி, சிறுத்தை, காட்டெருமை, யானை இன்னும் கணக்குவழக்கில்லாம மான், சோலைமந்தி குரங்கு அத சிங்கவால் குரங்குனு கூட சொல்லுவாங்க.., நரி, அப்பறம் தமிழகத்தின் மாநில விலங்கான 'வரையாடு' இதையெல்லாம் இந்தக் காட்டுக்குள்ள பார்த்திருக்கேன்... தெரியுமா?"

"வாவ்.. பல விஷய ஞானம் உனக்கு இருக்கு... கிரேட்.."

"தேங்க்ஸ்.. ஆனா இன்னும் எதுக்காக இந்தப் பயணம்னு நீங்க சொல்லவே இல்லையே..!"

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு நரியப் பார்த்தமோ.. பார்த்தோன என்ன தோணுச்சு.."

"ஐயோ பாவம்னு தோணுச்சு.."

"ஒ.. அது எல்லாருக்கும் வர்ற மனிதாபிமான உணர்வு... ஓகே.. வேற என்ன தோணுச்சு..? யாரு அதுக்கு தீ வச்சிருப்பா? இப்படி எதுவும் தோணல?"

"இங்க இருக்கற மக்கள் அந்த அளவுக்கெல்லாம் மோசமில்ல.. கர்ப்பிணி யானைக்குத் தீ வைக்கறது.. நாய்க்குட்டிய பூனைக்குட்டிய மேல இருந்து தூக்கிப்போட்டு செல்பி எடுக்கறதுனு.. மனித இனம் ரொம்ப மோசமான இனமா ஆகிட்டு இருக்கு.."

"கரெக்ட் தான் வருண்.. அப்படித்தான்.. ஆனா இப்ப நரிக்கு தீக்காயம் இருந்துச்சே.. அது காட்டுத்தீயால கூட இருக்கலாமில்லையா.."

"ஹ.. காட்டுத்தீயா.. இப்படியெல்லாம் பெருசா இங்க பரவாதே!"

"ஆனா.. இப்ப பரவிட்டு தான் வருது.."

"அத எப்படி நீங்க சொல்றீங்க..? எப்படி உங்களுக்குத் தெரியும்? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல.."

"அப்படியே கொஞ்சம் முன்ன பாரு"

அங்கே நாலைந்து சோலைமந்தி குரங்குகள் நின்று கொண்டிருந்தன. குரங்கென்றாலே குதித்து விளையாடிக் கொண்டிருந்தே பார்த்தவர்களுக்கு சோகமே உருவான குரங்குகளைக் கண்டதும் ரொம்ப பாவமாக இருந்தது. அவற்றின் உடம்பிலும் தீக்காயம்..

அவற்றிற்கே தெரியாமல் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தாள் தர்ஷினி..

அவற்றைக் கடந்ததும் மேகலா சொன்னாள்.

"ஆமா.. வருண்.. மிகப்பெரிய காட்டுத்தீ இந்தக்காட்டுல பரவிட்டு இருக்கு.. எங்களுக்கு எப்படியோ அந்த விஷயம் தெரிஞ்சிருச்சு.. அதுவும் தீப்பிடிச்சு ரெண்டு மூனு நாளாச்சு.. அரசாங்கத்தால அணைக்க முடியல.. ரொம்ப ட்ரை பண்றாங்க.. ஆன முடியல.. அதனால இன்னும் வெளிய கூட சொல்லாம இருக்காங்க... அதத்தான் நேரடியா படம்பிடிச்சு நாம டிவில காட்டப்போறோம்.. இப்ப புரிஞ்சுதா.. நாங்க சொல்ல வரது.. நாங்க செய்ய வந்திருக்கற வேலை.."

"காட்டுத்தீயா..! மிகப்பெரிய காட்டுத்தீயா..! இதுவரைக்கும் இப்படி இங்க வந்தது இல்லையே..! நீங்க சொல்றது கேட்டா எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. இந்தக்காட்டுக்கு இது மிகப்பெரிய ஆபத்து.. நிச்சயமா இத வெளியுலகுக்கு தெரியப்படுத்தத்தான் வேணும்.."

"குட் வருண்.. நிச்சயமா இன்னும் கொஞ்சம் நேரத்துல நாடே அதிரப்போகுது பார்"

(தொடரும்)

அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (7-Jan-22, 10:52 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 45

மேலே