முன்னம் முகம்போல முன்னுரைப்ப தில் – நான்மணிக்கடிகை 46

நேரிசை வெண்பா

நாற்ற முரைக்கும் மலருண்மை கூறிய
மாற்ற முரைக்கும் வினைநலந் - தூக்கின்
அகம்பொதிந்த தீமை மனமுரைக்கும் முன்னம்
முகம்போல முன்னுரைப்ப தில் 46

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

மலரின் இருப்பை அதன் மணமே அறிவிக்கும்;

ஒருவனது செய்கைத் திறத்தை அவன் சொன்ன சொல்லே அறிவிக்கும்;

ஆராய்ந்தால் நெஞ்சிற் செறிந்த தீமைகளை அவனது நெஞ்சமே அவனுக்கு அறிவிக்கும்;

ஒருவன் உள்ளக் குறிப்பை அவன் முகத்தைப் போல முற்படத் தெரிவிப்பது வேறில்லை.

கருத்து:

மலரின் உண்மையை அதன் மணமும், ஒருவன் செயற்றிறனை அவன் சொல்லும், நெஞ்சிற் செறிந்த தீமையை அவன் நெஞ்சமும், உள்ளக் குறிப்பை முகமும் அறிவித்துவிடும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jan-22, 4:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே