கோதையவள் தெய்வீக பிரசாதம்

"கதிருக்கும் குளிரும் அதிகாலை வேளையிலே,
தளிர் உடல்தான் அது நீராடி ,
வளர்காதல் அதனுடன் போராடி,
மலர்மாலை ஒன்றை தானே சூடி,

மை கொண்ட விழிகள் உருக,
நெய் கண்ட அக்காரவடிசல் அமுதம் கரங்களில் வழிய,

மாய உலகினை மறந்து,
மாலன் உறவினை நினைந்து,

குதிர் நெல் எடுத்து அரிசியாக்கி,
உதிர் வெல்லம் சேர்த்து
அதை இனிப்பாக்கி,
முந்திரி,திராட்சையுடன்

மணக்க, மணக்க நெய்யுடன்
கண்ணனை மணக்க, மணக்க
துடிக்கும் மெய்யுடன்,

'கூடாரவல்லி' அன்று நீ படைத்த அக்காரவடிசல் சாதம்,
கோடான கோடி ஆண்டுகள்
போயினும்,
நினைத்தாலே இனிக்கும்
"தெய்வத்தின் பிரசாதம்".

எழுதியவர் : (11-Jan-22, 12:25 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 92

மேலே