இறைவன்

மண்ணைப் பார்த்த நான் விண்ணையும் பார்த்தேன்
விண்ணில் மின்மினுக்கும் தாரகைகள் மற்றும்
கோள்களும் புரிந்துகொண்டேன் நான் இப்போது
படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்று
புரிந்துகொண்டால் தெரியும் அவன்
புரிந்துகொள்ள மறுப்பவர்க்கு என்றும்
அவர்களை 'இறைவன் இல்லை' என்று
சொல்லவைக்கும் பிரானும் அவனே என்னவிந்தை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Jan-22, 1:46 pm)
Tanglish : iraivan
பார்வை : 76

மேலே