கடக்கும் கசப்புகள் - சி எம் ஜேசு

வருடங்கள் இரண்டு முடிந்தது
பின்னோக்கி பார்க்கிறேன்

எதுவெல்லாம் இழந்தேன்
எவையெல்லாம் இருக்கிறதென்று

இயற்க்கை வாழ்வை இழந்து செயற்கை சுவாசத்திற்கு மாறும்
உலகை காண்கிறேன்

மானுடமெனும் அதிசயம்
சட்டங்களால் மட்க்கி போகும்
நிலை காண்கிறேன்

நான் நானாக வாழ முடியாமல்
வீணாகி போகின்ற நிலை காண்கிறேன்

சுதந்திரம் எனும் சொர்க்கம்
சுகமற்ற வாழ்வால் மறைந்து போன
மாயம் காண்கிறேன்

வாழ்வை மீண்டும் உயிர்பிக்கும்
முயற்சியில் முனைப்பாகி முன்னோக்கி நகர்கிறேன்

எழுதியவர் : சி .எம் .ஜேசு (17-Jan-22, 9:51 am)
பார்வை : 112

மேலே