அவள் பார்வை
அவள் கயல் விழிகளின் மனோகரப் பார்வை
அள்ளியென்னை அப்படியே கட்டிப்போட என்னுள்
எழுந்தது ஓர் கர்வம் அவள் பார்வையின்
காட்டிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள
என்புன்னகையை ஓர் அம்பாக அவள்மீது
விடுத்தேன் அவள் பார்வை அதைவிழுங்கியதோ
இன்னும் இறுக்கப் பின்னியதோ அவள் பார்வை
அசையவே முடியாது மகுடிமுன் நாகம்போல்
நான் ஆங்கு இருந்தேன் உணர்ந்தேன்