முதுமை
முதுமை
இளமையின்
எதிர்ப்பதம்!
பகல்களின்
இரைச்சல்கள்
அடங்கிய
இரவு!
முளைத்தலை
முடித்துக்கொண்ட
முழுவிதை!
பச்சையத்தை
இழந்துவிட்ட
பாவ இலை!
மண்ணுக்கு
பாரமான
மனித இலை!
சொற்களை
கூட்டிச்சொல்ல
விசையற்ற
வில்!
கடலடைந்த
கால்வாய் நீர்
கடலுக்கு
ஏன்
முதுமை
இல்லை?
காற்றுக் ஏன்
முதுமையில்லை?
மலைக்கு
ஏன்
முதுமை
இல்லை?
இவையெல்லாம்
எதற்கும்
ஆசை கொண்டதில்லை!
ஆகவே
அதிசயமாய்
பார்க்கிறோம்!
மேகத்தின்
முதுமை
மழை!
மன்மதன்
இளமையின்
தலைவன்!
காலன்
முதுமையின்
தலைவன்!
காலசக்கரத்தின்
இரண்டு
ஆரங்கள்
முதுமையும்
இளமையும்!
முதுமை தான்
முற்றிய
அறிவைப் தருகிறது!
இளமை
எல்லாம்
நிலையானது
என இயம்புகிறது!
முதுமையிடம்
கற்று
இளமையிடம்
எடுத்து சொல்!
இளமை
முழுமையான
வாழையிலை!
முதுமை
கிழிந்து
தொங்கும்
தென்னை ஓலை!
முதுமை
நீர்வற்றிய
வேடந்தாங்கல்!
முதுமை
வசந்த காலத்தை
தொலைத்த
வற்றல் மரம்!
முதுமை
காலன் வழி
காத்துக் கிடக்கும்
கால்நடை பயணி
முதுமை
குழந்தையின்
மற்றொரு
வடிவம்
முதுமை
குழந்தைகளை
முடிந்தவரை
கவனிப்போம்!!