ஹோட்டல் நகைச்சுவை

ஹோட்டலில்

வந்தவர் : ஏம்ப்பா , சூடா பில்டர் காபி கிடைக்குமா?
சர்வர்: சூடாத்தான் இருக்கும். ஆனால் ஆத்தி தான் கொடுப்போம்

வந்தவர்: ஏம்ப்பா மெதுவடை கல்லுமாதிரி இருக்கு?
சர்வர்: அது பார்கின்றவங்க மனநிலையை காட்டுது

சர்வர் : plain ரவா தோசையா இல்லை ஆனியன் ரவா தோசையா?
வந்தவர்: எனக்கு ப்ளெயினும் வேண்டாம் ஆனியனும் வேண்டாம். வெறும் ரவா தோசை கொடு

சர்வர்: சார் மீல்ஸா டிபின்சா?
வந்தவர் : எது சூடாக கிடைக்கும்?
சர்வர் : ரெண்டுமே
வந்தவர்: அப்போ ரெண்டையும் கொண்டா
சர்வர் : ????

சர்வர் : கல்லாப்பெட்டி, இந்த கிராக்கி ஒன்னும் சாப்பிட்டாலே, ஆனால் ரெண்டு கிளாஸ் தண்ணீர் குடித்தது. வாங்கிக்க அஞ்சு ரூபாய்

வந்தவர்: ஏம்பா, பில்டர் காபியில் ஒரு மணம் இல்லை
சர்வர் : சார் எல்லா பூக்களிலும் மணம் உண்டா?
வந்தவர்: இல்லையே
சர்வர்: இங்கேயும் அப்படிதான்

வந்தவர் : ஏம்ப்பா சர்வர், தோசைக்கு கீழே வைக்காம வாழை இலையை தோசைக்கு மேலே வச்சு மறச்சிருக்கே ?
சர்வர்: பின்ன என்ன சார், ஒரே நேரத்தில் ஆறு தோசை ஆர்டர் பண்ணிட்டீங்க. பார்க்கறவங்க கண் போடக்கூடாதுனு தான் மூடி கொண்டு வந்தேன்.

வந்தவர்: ஒரு பிளேட் இட்லி என்ன விலைப்பா?
சர்வர் : பத்து ரூபாய்
வந்தவர்: இரண்டு இட்லி விலை என்ன?
சர்வர் : பத்து ரூபாய்
வந்தவர்: அப்போ, ஒரு பிளேட் மட்டும் கொடு, இட்லி வேண்டாம்.

வந்தவர்: இந்த அல்வா போன தீபாவளிக்கு செய்ததா? சுவை ஒரு மாதிரி இருக்கிறதே
சர்வர்: போன தீபாவளிக்கு முந்தய தீபாவளிக்கு செய்தது. அதனால் தான் 20 % தள்ளுபடி. போன வருட அல்வா என்றால் 10 % மட்டுமே தள்ளுபடி.

வந்தவர்: சாப்பாட்டில் என்னென்ன கிடைக்கும்?
சர்வர்: புழுங்கரிசி சாதம், பருப்பு போடாத சாம்பார், காய் இல்லாத கூட்டு, மணம் இல்லாத ரசம், காரமில்லாத ஊறுகாய், இனிப்பில்லாத பாயசம். அதிருஷ்டம் இருந்தா நிறைய கல்லு.
வந்தவர்: இதையெல்லாம் ஒரு மனுஷன் சாப்பிடுவானா?
சர்வர்: நான் உங்களை மனுஷனா நினைக்கவில்லையே !!!

வந்தவர் : நானும் பார்க்கிறேன். தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்த வேகாத வாழைக்காயை போடுகிறாயே?
சர்வர்: மூன்று நாட்களுக்கு முன் மூன்று வாழைக்காய் நறுக்கி கறி செய்தது. மூன்று நாளா நீங்க ஒரு ஆள்தான் இந்த ஹோட்டல்ல சாப்பாடு சாப்பிடுறீங்க.

வந்தவர்: உள்ளே வரும்போது அவ்வளவு மணம் அடித்தது.ஆனால் பஜ்ஜி சூடு மணம் இல்லாமல் உன் முகம் மாதிரி இருக்குதே?
சர்வர்: நீங்கள் உள்ளே வரும்போது அடித்த மணம் பக்கத்துக்கு ஹோட்டல்ல. அது பஜ்ஜி இல்லை.ரவா சொஜ்ஜி.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (17-Jan-22, 7:30 pm)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : hotel nakaichchuvai
பார்வை : 219

மேலே