அரிவாள் மூக்குப் பச்சிலை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வெட்டுக்,கா யத்தை விரைவில் உலர்த்திவிடுந்
துட்டக் கடுவோட்டுந் தோன்றிமிகக் - கெட்ட
பிரிவாற் றலையைப் பிளக்கு(ம்)வலி நீக்கும்
அரிவாள்மூக் குப்பச் சிலை
- பதார்த்த குண சிந்தாமணி
இது வெட்டுக்காயம், பெருவிடம் உதிரக்கெடுதியால் பிறந்த தலைவலி இவற்றைப் போக்கும்