காட்டாமணக்கு இலை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கட்டி விரணங் கரப்பான் பிலீகமதி
கெட்டியுறு குன்மங் கிளைத்தசிரங் - கொட்டுமே
கூட்டோ டொழியுங் குவடனைய கொங்கைமின்னே
காட்டா மணக்கிலையைக் கண்டு
- பதார்த்த குண சிந்தாமணி
நேரிசை வெண்பா
காட்டா மணக்காற் கபவாத சூலையுடன்
வீட்டு தலைநோய் விரிகிரந்தி - வாட்டுகின்ற
உண்மூலம் போகும் உடம்புலர்த்தல் வெட்டையறுந்
திண்மூல தாதுவுமாஞ் செப்பு
- பதார்த்த குண சிந்தாமணி
இவ்விலை மேகக்கட்டி புண், கரப்பான், பிலீகம், கண்டக்கட்டி, ஜுரங்கள், ஐயவாதக் குத்தல், தலை நோய், பெரும்புண், உள்மூலம், உள்ளுருக்கு வெள்ளை இவற்றைப் போக்கி சுக்கில விருத்தியை உண்டாக்கும்