அழகே திமிரே -2

இரண்டு வருடங்களுக்கு பின்



"கீனிங் கினீங்க" என்று தலை மாட்டில் யாரோ இரும்பு துண்டை அடிப்பது போல இருந்தது..... மெல்ல போர்வைக்குள் லிருந்து வெளியே வந்தது அந்த கை.
....


அலாரத்தை ஆஃப் செய்து எழுந்தாள் ஷாலினி..... ஜன்னல் வெளியிருந்து சூரியனின் வெளிச்சம் கண்ணில் பட கூசிய கண்ணை ஐந்து விரல்களால் காத்து கொண்டாள்.....


கெமிக்கல் இன்ஜினியரிங் பைனல் இயர் படிக்கிறாள்..... அழகு தேவதை..... டெட்டிபியர் காதலி.... தன் டெட்டியை கொஞ்ச நேரம் கொஞ்சிவிட்டு குளிக்க சென்றாள்......


ஹாலில் ஷாலினியின் அப்பா சேகர் கையில் நாளிதலுடன் .. கிட்சனில் அம்மா தாரணி......
காலேஜ்க்கு கிளம்பி ஹாலுக்கு வந்தாள் ஷாலினி....


அம்மா தாரணி..... வெகு கோபமாக தட்டை அவள் முன்னாள் வைத்துவிட்டு கிட்சனுள் செல்ல.... "என்ன" என்பது போல அப்பாவை பார்த்து கண்களாலே கேட்டாள்.....


தனக்கு ஏதும் தெரியாது என்று உதட்டை பிதிக்கியாவாரு மீண்டும் பேப்பரில் முழ்கினார் சேகர்.....

கையில் தோசையோடு வந்து அவள் தட்டில் வைத்தார் தாரணி..... அவள் தோசையை வாயில் வைக்க போகும் நேரம்......


தாரணி : இங்க பாருடி.... இது உனக்கு கடைசி வருஷம்.... புது காலேஜ் போனோமா படிச்சோமா வந்தோம்மான்னு இரு.... இங்கையும் ஏதும் பிரச்னை பண்ணிட்டு வந்துடாத....

சேகர் : இப்போ என் பொண்ணு என்ன தப்பு பண்ணிட்டா....


தாரணி : (முறைத்தவாறு) எல்லாம் உங்களாலதான் செல்லம் குடுத்து செல்லம் குடுத்து அவளை கெடுத்து வச்சிருக்கீங்க....
நீங்க குடுத்த எடம் தான் இவ்ளோ தூரம் வந்து நிக்கிறா......

ஷாலினி : இப்போ என்ன நடந்ததுன்னு இவ்ளோ குத்திக்கிறீங்க.....

தாரணி : என்ன நடந்ததா.... உன்ன காலேஜ்லேந்து டிஸ்மிஸ் பண்ணிருக்காங்க டி அதுக்கு மேல என்ன ஆகணும்....

சேகர் : என் பொண்ணு தப்பு பண்ணி டிஸ்மிஸ் அகல டி தப்ப தட்டிகிட்டு டிஸ்மிஸ் ஆகிருக்க.... ஒரு அப்பாவா இப்டியோரு பொண்ண பெத்ததுக்கு நான் ரொம்ப பெருமைப்படுறேன்.....


ஷாலினி : சூப்பர் டாடி... தேங்க்ஸ்....

தாரணி : ஆமா இவ பெரிய வேலுநாச்சியா அப்டியே குதிரைல போயி எல்லார் தலையையும் வெட்டி வீசிட்டு வந்துருவா.... ஹே.... நீ பண்ண வேலைக்கு உன்ன தான் டிஸ்மிஸ் பண்ணங்க... அந்த பொண்ண கிண்டல் பண்ண பசங்க எல்லாம் அங்கே தான் இருக்காங்க.... நீ இல்லாதப்பையும் அங்க அதே தான் நடக்கும்..... ஒன்ன புரிஞ்சிக்கோ இந்த உலகத்துல ஒவ்வொரு நிமிஷமும் எதோ ஒரு எடத்துல எதோ ஒரு தப்பு நடந்துகிட்டு தான் இருக்கு அத நீ நெனச்சா எல்லாம் தடுத்திட முடியாது.....

. ஒழுங்கா படிச்சி முடிச்சிட்டு ஒரு வேலைய தேடிகிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழுற வழிய பாரு....


ஷாலினி : அம்மா என் கண்ணு முன்னாடி நடக்குற தப்பா பாத்துட்டு பாக்காத மாதிரி என்னால போக முடியாது.... எனக்கு கோவம் தான் வரும் தட்டி கேக்க தன் செய்வேன்....


தாரணி : ஓஹோ அப்டியா..... மத்தவங்க தப்பு பண்ண உனக்கு கோவம் வரும் உன் கோவதால நடந்துதே ஒரு தப்பு அதை யாரு தட்டி கேக்குறது.....


. தாரணி அப்படி கேட்டது சுருக்கென்றது ஷாலினிக்கு.... கோவமாக சாப்பிடாமல் கல்லூரி நோக்கி புறப்பட்டாள்.....


சேகர் : ஏம்மா அதையே சொல்லி அவளை காயப்படுத்துற....


தாரணி : நான் காயப்படுத்தலங்க அவளுக்கு நியாபகம் படுத்துறேன் அவ கோவம் குடுத்த வலி கொஞ்சமா.... அதுலேந்து அவளாலையே மீண்டு வர முடிலையே...


. என்றார் கண்ணீருடன்..... சேகர் தாரணியை ஆதரவாக அணைத்து கொண்டார்...


சேகர் : எல்லாம் சரியாயிடும்.... கவலை படாத....












கார்த்திக்..... அந்த விபத்தில் வர்ஷாவை இழந்தவன்.... வெறிகொண்டவனாய் மாறினான்.... எந்நேரமும் போதை,கோபம்..... அவனை இன்னும் சீரழிக்க ஒரு கூட்டம்.....

கார்த்திக்கும் காலேஜ் பைனல் இயர் தான்..... மெக்கானிக்கல் என்ஜினீயரிங்....
படிப்பு என்பதே இல்லாமல் வர்ஷாவின் நினைவுகளுக்காகவே அவன் அந்த கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தான்.....


. அவனுக்கான போதையும் அங்கே தான் கிடைத்தது..... போதை ஊசி.... மது என்று ஒரு கூட்டத்தை வைத்து கொண்டு இவனும் அதில் மூழ்கினான்..... வர்ஷாவின் நினைவாக அவன் செல்வது மூன்று இடங்கள் மட்டுமே..... காலேஜ்... அந்த நெடுஞ்சாலை.... அவளின் கல்லறை....


அந்த விபத்தில் சிக்கி மயக்கமுற்றவன் .... கண் விழித்த போது தேடியது வர்ஷாத்தான்..... அவனுக்கு கிடைத்ததோ அவள் இறந்து விட்டாள் என்னும் பதில் தான்....

. அவன் கண் விழிப்பதற்கும் அவளை புதைத்து விட்டனர்..... அவளை கடைசியாக பார்க்கும் கொடுப்பினை கூட அவனுக்கு இல்லை... அவனது வலி அழுகையாக பல நாட்கள் கழிந்தது.....


கடைசியாக அந்த கார் பற்றி விவரங்களை விசாரித்தான் அதற்க்கும் பதில் இல்லாமல் போகவே... தனது கோபத்தை... எங்கே யாரிடன் காட்டுது என்று தெரியாமல்... இன்று தன்னையே தண்டித்து கொண்டிருக்கிறான்.......









கல்லூரி வந்து சேர்ந்தாள் வர்ஷா...... வாசலில் கால் வைத்த நேரம் ஐந்து ஆறு பைக்குகள் அவளை தாண்டி போனது அதில் ஒன்றின் சைடு மிரர் அவள் கையில் மோத கோவமாக கத்தினாள் ஷாலினி....


ஷாலினி : யூ இடியட்....


அவளின் சத்தத்தை கேட்டு திரும்பி பார்த்தான் கார்த்திக்.....

எழுதியவர் : நிலா மகள் (19-Jan-22, 6:35 pm)
சேர்த்தது : nilamagal
பார்வை : 295

மேலே