அழகே திமிரே1

.


ஒரு அழகான மாலை நேரம்.... நீண்டு நிற்கும் நெடுஞ்சாலை..... கண் இமைக்கும் நேரத்தில் உயிரை வாங்கும் வேகத்தில் வந்தது அந்த கார்.....


அதன் வேகத்தில் எங்கோ சாலையோரத்தில் அமர்ந்திருந்த அந்த காக்கைகள் வெருண்டு பறந்தது.......இங்கே தன் உயிருக்கும் மேலான காதலி வர்ஷாவை வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற. சொல்லி கொண்டிருந்தான் கார்த்திக்.....


கார்த்திக் : ஏய் பொண்ட்டாடி என்ன புதுசா பயப்படுற.... எப்போதுமே நாம போற டிரைவ் தானே டி.... இன்னைக்கு வீக் எண்டு வேற.... நான் செம்ம ஹாப்பி மூட்ல இருக்கேன்.... நீ ஏன் டி இப்டி இருக்க.....


வர்ஷா : டேய் எங்க வீட்டுல நம்ம கல்யாணத்துக்கு ஒதுக்கவே மாட்றாங்க... அத பத்தி நீ கவலையே பட மாட்ற......


கார்த்திக் : இதுல கவலபட என்ன டி இருக்கு.... நீ தான் அவங்கள கேக்கணும் இவங்கள கேட்கணும்ன்னு சொல்ற.... என்ன பொறுத்த வரைக்கும் யாரையும் கேக்க தேவயில்ல..... வேணும்ன்னா இன்னைக்கே கூட கல்யாணம் பண்ணிக்கலாம்....

வர்ஷா : உண்மையாவா சொல்ற


கார்த்திக் : இப்பவே வா ரெஜிஸ்டர் ஆபீஸ் போலாம்..... என்ன சொல்ற.

வர்ஷா : இப்டியே எப்படி டா கல்யாணம் பண்ணிக்கிறது.... அட்லீஸ்ட் மாலை தாலி எல்லாம் வேணாமா...

கார்த்திக் : அதுக்கென்ன வாங்கிட்டா போச்சு.... இப்போ வண்டில ஏறு....

கார்த்திக் சொல்ல தன் ஆசை வாழ்க்கை கனவுகளுடன் பைக்கில் ஏறினாள் வர்ஷா.....


இன்னும் கொஞ்சமும் கோபத்தை குறைக்காத காளை. போல சீறிக்கொண்டு வந்து கொண்டிருந்தது அந்த கார்.....


அந்த காரை எப்படியென்னும் நிறுத்திவிட அதன் பின்னாலேயே வந்து கொண்டிருந்தது அந்த பைக்.... தன்னால் முடிந்த வரை வேகமாகவே வந்தான் அந்த பைக்கில் இருப்பவன்.... அந்த வேகத்திலும் தன் கைபேசியை எடுத்தான்... வெண்திரையில் தன் மனதில் ஆழ பதிந்த அந்த எண்களை டயல் செய்தான்.... அந்த அழைப்பெல்லாம் வீணானது....

அது அவன் எதிர்பார்த்தது தான் என்றாலும் மீண்டும் மீண்டும் முயற்சித்து கொண்டே தான் இருந்தான்.......

கல்யாணத்திற்கு தேவையான புடவை வேட்டி சட்டை... தாலி மாலை என அனைத்தையும் ஆசையாக வாங்கினாள் வர்ஷா...

வர்ஷா : மாம்ஸ்.... நான் வாங்குன டிரஸ் எல்லாம் ஓகே தானே உனக்கு.....

கார்த்திக் : நீ எது எடுத்தாலும் ஓகே டி பொண்டாட்டி...... ஹே பொண்டாட்டி கடைசியா ஒரு பாஸ்ட் ரைடு போலாமா.

வர்ஷா : என்ன லாஸ்ட் ஆஹ் வா.....


கார்த்திக் :ஆமாண்டி பொண்டாட்டி.... இன்னும் கொஞ்ச நேரத்துல மேரேஜ் பண்ணிக்க போறோம்.... அதுக்கு அப்புறம் நாம ஹஸ்பண்ட் அண்ட் வொய்ப் ஆயிடுவோம்.... லவர்ஸ் ஆஹ் கடைசியா ஒரு டிரைவ்.....


வர்ஷா : ஓகே பட் நீ ஹெல்மெட் போட்டு தான் ஓட்டணும்.....

கார்த்திக் : ஓகே டி செல்ல பொண்டாட்டி......


என்றவாறு அந்த நெடுஞ்சாலைக்கு வந்தான் கார்த்திக்... வேகம்..... வேகம்...... வேகம்...., மட்டுமே இருந்தது அவனிடம்.... அவன் மொத்த சந்தோஷமும் அந்த வேகத்தில் தெரிந்தது.......

அவன் எதிர்பார்க்காத அந்த நிமிடம் வந்தது.....


கண் இமைக்கும் நேரத்தில் அந்த பைக் மீது வந்து மோதியது அந்த கார்.... தரையில் விழுந்த பைக் சிறிது தூரம் அவர்களை இழுத்து சென்றது.... அதில் அருகில் இருந்த கல்லில் மோதியது வர்ஷாவின் தலை....


அவள் கடைசியாக பார்த்தது.... அவளை காப்பாற்ற முடியாமல் உடலெங்கும் காயங்களும் கிடந்த கார்த்திக்கின் முகத்தை....

எழுதியவர் : நிலா மகள் (19-Jan-22, 8:18 am)
சேர்த்தது : nilamagal
பார்வை : 224

மேலே