முன்னெச்சரிக்கை

அலை வீசுங்காற்றோடு
‌ விரல் ஆட்டும் மரங்கள்
உலகத்தில் உயிரை எல்லாம்
‌செழிப்பாக்கும் உரங்கள்

வலை வீசும் ஆளுக்கு
வருங்காற்று அறிக்கை

மழை தூவும் வானமோ
மரம் போட்ட அறிக்கை

குரல் ஊத நாவிற்கு,
மொழி கோர்க்க அறிக்கை

பசி ஆளும் வயிற்றுக்கு
உணவூட்ட அறிக்கை....

திசை மாறும் பறவைக்கு
இடமழிந்த அறிக்கை

வெயில் அடித்த பூமியின்மேல்
இருள் பூச அறிக்கை....

துயில் கண்ட உயிர்களுக்கு
தூக்கம் வந்து அறிக்கை

சிறகிழக்கும் மரங்களுக்கு
வரும் உறவின் அறிக்கை

எனக்கேது அறிக்கை
நான் உனைத்தேடி வந்தும்
ஓர் விளங்காத விளக்காக
உன் பார்வை, எனக்கா?

எழுதியவர் : ஆ. ஸ்டாலின் சகாயராஜ் (22-Jan-22, 2:25 am)
சேர்த்தது : Stalin Saga
பார்வை : 90

மேலே