தத்துவஞானி டாக்டர் இராதாகிருஷ்ணன் போற்றி நயந்தேத்துவனே
உலகின் இருள் அகற்ற
உதிக்கும் ஆதவன் போலும்
அறியாமை இருள் அகற்ற
அவன் அருளால் உதித்தார்
தணிக்கைத் தந்த தத்துவஞானி
மணியாய் படைத்த "இந்திய தத்துவம்" வையம் அறிய விளக்கிய மேதை
உன்னால் உயர முடியும் என்றே ஊக்கம் தந்து உணர்த்திய ஆசான்.
இன்சொல் பொற்பு பணிவு
இயல்பாய் அமையப் பெற்றார்
இன்பத் தத்துவக் கல்வியால்
துன்பம் கடந்த ஞானி இவரே
இன்முகம் கொண்டு
வாழ் வாங்கு வாழ்வதற்கே
வழி காட்டும் வாழ்க்கை
இனி ஒன்று வேண்டுமோ?
நல்வழிக் காட்டும் இவர்
திரு வாழ்க்கை போதுமே!
இவர் பாதம் தன்னை
இருக் கையினும் ஏந்தி
நற் பதம் நல்கும்
இறை பொற்பாதம் என்றே
போற்றி நயந்தேத்துவனே!