வேறொன்றுமில்லை
ஓடிக் கொண்டே இருக்கிறது
காலம்
தேடிக் கொண்டே இருக்கிறோம்
நாமும்
நமக்குத் தேவையானவற்றையும்
அவசியமானவற்றையும்
போதுமென்றோ
இன்னும் எதற்குச் சோதனைகள் என்றோ
தோல்விகள் எதற்கென்றோ
சிந்திக்கக் கூட நேரம் இல்லை
எதில் வெற்றி எதில் சமாதானம் என்று
புரிதல் கிடைக்காத நிலையிலும்
ஓடிக் கொண்டே இருக்கிறது காலம்
மன நிறைவு எதில் கிடைக்கும் என்ற
விடை கிடைக்காத நிலையிலும்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
